தேசியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் (NIT) மற்றும் இந்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (CFTIs) போன்றவற்றில் இடம்பெற்றிருக்கும் பி.இ. / பி.டெக். (B.E / B.Tech) பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institutes of Technology (IIT), இந்தியச் சுரங்கங்கள் பள்ளி (Indian School of Mines) போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான JEE (Advanced) நுழைவுத்தேர்வுக்கு முதன்மைத் தகுதித் தேர்வாக JEE (Main) நுழைவுத்தேர்வு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு வரை Central Board of Secondary Education (CBSE) நடத்திவந்த J.E.E. மெயின் தேர்வை இந்த (2019) ஆண்டு முதல் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (National Testing Agency – NTA) என்ற அமைப்பு வாயிலாக நடத்தப்படும்.
நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி
உயர்கல்வி மற்றும் ஊக்கத்தொகை போன்றவற்றிற்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் ஒரு தன்னாட்சி அமைப்பாக NTA உள்ளது. இந்த அமைப்பின் ஆட்சிக்குழுவில், மத்திய அரசின் உயர்கல்வி செயலர், தொழிற்கல்வி உப செயலர், ஜாயின்ட் செகரெட்டரி, ஃபைனான்சியல் அட்வைசர், சி.பி.எஸ்.இ. தலைவர், நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி டைரக்டர் ஜெனரல், கான்பூர் ஐஐடி டைரக்டர், உயர்கல்வித் துறை ஃபைனான்ஸ் டைரக்டர், ஐஐடி உயர்கல்வித் துறை இயக்குநர் இவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பு JEE(MAIN), NEET(UG), CMAT, GPAT நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறது.
JEE MAIN நுழைவுத்தேர்வு
B.E. (Bachelor of Engineering), B.Tech. (Bachelor of Technology), B.Arch. (Bachelor of Technology), B.Plan. (Bachelor of Planning) ஆகிய படிப்புகளை National Institute of Technology (NIT), Indian Institute of Information Technology, Centrally Funded Technical Institutions (CFTI’s) ஆகியவற்றில் ஏற்புடைய நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய நடத்தப்படுகிறது. JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.ஐ.டி நிறுவனங்களில் சேர JEE (Advanced) தேர்வு எழுத இயலும்.
விண்ணப்பிக்கத் தகுதி
பி.இ./பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, +2-ல் இயற்பியல், கணிதம் இவற்றை கட்டாயப் பாடங்களாகவும், வேதியியல், உயிர்த்தொழில்நுட்பம், உயிரியல், தொழில்நுட்பக் கல்வி அல்லது வொகேஷனல் பாடம் இவற்றில் ஏதேனும் ஒன்றையும் எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினராயின் குறைந்தது 75 விழுக்காடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராயின் குறைந்தது 65 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பி.ஆர்க்., பி.பிளானிங் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, +2-ல் கணிதத்துடன் கூடிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து, மேற்குறிப்பிட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JEE MAIN தேர்வு புதிய செய்தி
2019-லிருந்து ஜெ.யி.யி. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டிற்கு இருமுறை நடைபெறும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வையோ, இரண்டு தேர்வுகளையுமோ எழுதலாம். இரண்டில் அதிக ரேங்க் எடுத்த தேர்வு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
JEE MAIN தேர்வு முறை
இத்தேர்வுகள் கணினி வழியான ஆன்லைன் தேர்வுகள் ஆகும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான இத்தேர்வு 3 மணி நேரத் தேர்வாகும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வினாத்தாள் இருக்கும். குஜராத், டாமன், டையு, நாஹர் ஹவேலி பகுதிகளில் மட்டும் குஜராத்தி மொழியிலும் வினாத்தாள் இருக்கும். பி.இ./பி.டெக். மட்டும் விண்ணப்பிப்பவர்கள் தாள் 1 மட்டும் எழுத வேண்டும். இத்தாளில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களில் தலா 30 வினாக்கள் இருக்கும். மொத்தம் 90 வினாக்களுக்கு 360 மதிப்பெண்கள். பி.ஆர்க்., பி.பிளானிங் மட்டும் விண்ணப்பிப்பவர்கள் தாள்-2 மட்டும் எழுத வேண்டும்.
இத்தாளில் ஆப்டிடியூட் (Aptitude), கணிதம் (Mathematics), படம் வரைதல் (Drawing) என்ற பிரிவுகள் இருக்கும். ஆப்டிடியூட் பிரிவில் 50 வினாக்களும், கணிதப் பிரிவில் 30 வினாக்களும், படம் வரைதல் பிரிவில் 2 வினாக்களும் இருக்கும். மொத்தம் 82 வினாக்கள். மொத்த மதிப்பெண்கள் 390.பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளானிங் எல்லாவற்றையும் எழுதி ஏதேனும் ஒன்றை பெற விரும்புபவர்கள் இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வுகள் ஆன்லைனில் இருக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறையும். ஏதேனும் வினாக்களுக்கு விடையளிக்காமல் விடும் பட்சத்தில் மதிப்பெண் ஏதும் குறையாது.
தாள் 1 பாடத்திட்டம் கணிதம் (Mathematics)
1. செட்ஸ், ரிலேஷன்ஸ் & ஃபங்ஷன்ஸ்
2. காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ் & குவாட்ரெடிக் ஈகுவேஷன்
3. மேட்ரிக்சஸ் & டிட்டர்மினன்ட்ஸ்
4. ஃபெர்முட்டேஷன் & காம்பினேஷன்
5. மேத்தமேட்டிக்கல் இண்டக்ஷன்
6. பைனாமியல் தியரம் & அப்ளிகேஷன்ஸ்
7. சீகுன்சர்ஸ்& சீரிஸ்
8. லிமிட், கண்டினியுட்டி & டிஃபரன்ஸிய பிலிட்டி
9. இண்டெக்ரெல் கால்குலஸ்
10. டிஃபரென்ஷியல் ஈகுவேஷன்ஸ்
11. கோ-ஆர்டினேட் ஜாமெட்ரி
12. வெக்டர் அல்ஜிப்ரா
13. ஸ்டேட்டிஸ்டிக்ஸ் & புராபபிலிட்டி
14. டிரிக்னாமெட்ரி
15. மேத்தமேட்டிக்கல் ரீசனிங்
16. த்ரீ டைமன்ஷனல் ஜியோமெட்ரி
இயற்பியல்(Physics) பிரிவு A
1. பிசிக்ஸ் & மெசர்மென்ட்ஸ்
2. கைனமேட்டிக்ஸ்
3. லா ஆஃப் மோஷன்
4. வொர்க், எனர்ஜி & பவர்
5. ரொட்டேஷனல் மோஷன்
6. கிராவிட்டேஷன்
7. ப்ராப்பெர்ட்டிஸ் ஆஃப் சாலிட்ஸ் & லிக்குவிட்ஸ்
8. தெர்மோ டைனமிக்ஸ்
9. கைனட்டிக் தியரி ஆஃப் கேசஸ்
10. ஆசிலேஷன் & வேவ்ஸ்
11. எலக்ட்ரோ ஸ்டேக்டிஸ்
12. கரண்ட் எலக்ட்ரிசிட்டி
13. மேக்னெட்டிக் எஃபக்ட்ஸ் ஆஃப் கரண்ட் & மேக்னட்டிசம்
14. எலக்ட்ரோ மேக்னட்டிக் இண்டக்ஷன் & ஆல்ட்ரனேட்டிங் கரண்ட்ஸ்
15. எலக்ட்ரோ மேக்னட்டிக் வேவ்ஸ்
16. ஆப்டிக்ஸ்
17. டியூவல் நேச்சர் ஆஃப் மேட்டர்
18. ஆட்டம்ஸ் & நியூக்ளியஸ்
19. எலக்ட்ரானிக் டிவைசஸ்
20. கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்
பிரிவு: B
1. எக்ஸ்பரிமென்டல் ஸ்கில்ஸ்
வேதியியல் (Chemistry) பிரிவு: A
1. பேசிக் கான்சப்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி
2. ஸ்டேட்ஸ் ஆஃப் மேட்டர்
3. அட்டாமிக் ஸ்ட்ரக்சர்
4. கெமிக்கல் பாண்டிங் & மாலிக்குலர் ஸ்ட்ரக்சர்
5. கெமிக்கல் தெர்மோ டைனமிக்ஸ்
6. சொல்யூஷன்ஸ்
7. ஈகுலிபிரியம்
8. ரெடாக்ஸ் ரியாக்ஷன்ஸ் & எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
9. கெமிக்கல் கைனட்டிக்ஸ்
10. சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரி
பிரிவு: B
11. கிளாஸிஃபிக்கேஷன் ஆஃப் எலிமென்ட்ஸ் & பீரியாடிசிட்டி இன் ப்ராப்பர்டிஸ்
12. ஜெனரல் பிரின்சிபிள்ஸ் & ப்ராசஸர் ஆஃப் ஐசோலேஷன் ஆஃப் மெட்டல்ஸ்
13. ஹைட்ரஜன்
14. பிளாக் எலிமென்ட்ஸ் (அல்கலி, அல்கலைன் எர்த் மெட்டல்ஸ்)
15. P-பிளாக் எலிமென்ட்ஸ்
16. d, f பிளாக் எலிமென்ட்ஸ்
17. கோ-ஆர்டினேஷன் காம்பவுண்ட்ஸ்
18. என்விரோன்மென்டல் கெமிஸ்ட்ரி
பிரிவு: C ஆர்கானிக் கெமிஸ்ட்ரி
19. பியூரிஃபிகேஷன் & கேரக்ட்ரிசேஷன் ஆஃப் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்
20. பேசிக் பிரின்சிபில்ஸ் ஆஃப் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி
21. ஹைட்ரோ கார்பன்
22. ஹேலோஜன்கள் – ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்
23. ஆக்சிஜன் – ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்
24. நைட்ரஜன் – ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்
25. பாலிமர்கள்
26. பயோமாலிக்கூல்கள்
27. கெமிஸ்ட்ரி இன் எவ்வரி டே லைஃப்
28. பிரின்சிபிள்ஸ் ரிலேட்டட் டூ பிராக்டிக்கல் கெமிஸ்ட்ரி
தாள் 2 பாடத்திட்டம்
பகுதி: 1
அவேர்னஸ், விஸ்வலிஸிஸ், அனாலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி
பகுதி: 2
3 – டைமன்ஷனல் பர்சப்ஷன் ஸ்கெட்கிஸ் ஆஃப் சீன்ஸ், ஆக்டிவிட்டிஸ்
JEE MAIN தேர்வு (ஜனவரி) 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.9.2018
அட்மிட் கார்டு : 17.12.2018
தேர்வு நாட்கள் : 6.1.2019 முதல் 20.1.2019 வரை
தேர்வு முடிவுகள் : 31.1.2019
JEE MAIN தேர்வு (ஏப்ரல்) 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.2.2019 முதல் 7.3.2019 வரை
அட்மிட் கார்டு : 18.3.2019
தேர்வு நாட்கள் : 6.4.2019 முதல் 20.4.2019 வரை
தேர்வு முடிவுகள் : 30.4.2019
தரவரிசை : 2019 மே இரண்டாம் வாரம் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இத்தேர்விற்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தாள் மட்டும் விண்ணப்பிப்பவர்கள் பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் அனைத்துத் தரப்பு பெண்கள் ரூ.250 செலுத்த வேண்டும். இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1,300 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அனைத்துத் தரப்பு பெண்கள் ரூ.650 செலுத்த வேண்டும். மேலும் முழு விவரங்களையும் தெரிந்துகொல்ள www.nta.ac.in என்ற இணைய’தளத்தைப் பார்க்கவும்.
நன்றி – வசந்தி ராஜராஜன்