2019-20 கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்விக்கட்டணம், அல்லது 2020-21 கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா அரசாணை ஒன்றை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, 2019-20 கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்விக்கட்டணம், அல்லது 2020-21 கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ன்படி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு. எனவே, இந்த பேரிடர் காலத்தில், பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு வற்புறுத்தக்கூடாது.

இந்த அரசாணையை அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *