இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து4336க்கொண்டு வெற்றி பெறுவது எப்படி ?
தமிழ்நாடு காவல்துறையில் 1078 (எஸ்.ஐ) சார்பு ஆய்வாளர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீருடைப்பணி மீது தீரா ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தயாராக வேண்டிய நேரம் இது.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.5.2015.
இந்தத் தேர்வுக்கு தயாராவது எப்படி… எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்… ஆலோசனை சொல்கிறார், பல நூறு அரசுப்பணியாளர்களை உருவாக்கிய திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.ராமமூர்த்தி.
* எஸ்.ஐ. தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும். நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் ‘அப்ஜெக்டிவ் டைப்’ முறையில் நடக்கிறது இந்தத் தேர்வு. மொத்தம் இரண்டரை மணி நேரம் நடக்கும். இத்தேர்வு இரண்டு பெரிய பிரிவுகளை உள்ளடக்கியது. 1.பொது அறிவு. 2.காவல் உளவியல்.
* பொது அறிவில் வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொருளியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், ஆகியவை அடங்கும். இந்தப் பிரிவில் 80 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு அரை மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப்பெண்கள். உளவியல் பிரிவில் பகுப்பாய்வு, எண்கணிதம், உளவியல் திறன், தகவல் தொடர்புத் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவை அடங்கும். இந்தப் பகுதியில் 60 வினாக்கள் கேட்கப்படும். இவற்றுக்கும் ஒன்றுக்கு அரை மதிப்பெண் வீதம் 30 மதிப்பெண்கள்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, (தேசிய மாணவர் படை, சாரணியர் படை ஆகியவற்றுக்கான) சிறப்பு மதிப்பெண்கள், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு அனைவருக்கும் பொதுவான, திறந்தவெளி போட்டி முறையில் விண்ணப் பித்தவர்களுக்கானது (ஓப்பன் கோட்டா சிஸ்டம்).
* காவலர்களாக இருந்து கொண்டு டிபார்ட்மென்ட் கோட்டாவில் தேர்வு எழுதுபவர்கள், பொது அறிவு பாடத்தில் 30 கேள்விகளுக்கும், உளவியல், காவல் ஆணைகள், இந்திய ஆட்சி சட்டம் ஆகிய பகுதியில் இருந்து 140 வினாக்களுக்குமாக மொத்தம் 170 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு 24.5.2015 அன்று நடைபெறும்.
* கடந்த 2010ம் ஆண்டு நடந்த சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 10 வினாக்கள், வரலாறு 5, புவியியல் 7, அரசியல் அமைப்புச் சட்டம் 6, நடப்பு நிகழ்வுகள் 4, பொருளியல் 12, இயற்பியல் 8, வேதியியல் 8, உயிரியல் 10, கணிதம் 5, ஆங்கிலம் 5 என்று 80 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
* பொதுவாக இந்தத் தேர்வில் கேட்கப்படும் 40 சதவீத வினாக்கள், முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவே, பழைய வினாத்தொகுப்புகளை வைத்துப் படிப்பது நல்லது.
* 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணிப்பொறி ஆகிய பாடப்புத்தகங்களைப் படித்தாலே பொது அறிவு பாடத்தில் கணிசமான மதிப்பெண்களை ஸ்கோர் செய்து விடலாம்.
* உளவியல் பாடத்தில் 60 வினாக்கள் கேட்கப்படும். கடந்த முறை R.S. Agarwal அவர்களின் Verbal – Non Verbal Reasoning மற்றும் Quantitative Aptitude புத்தகங்களில் இருந்து மட்டுமே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டன. எனவே, இந்தத் தேர்விலும் அப்படி எதிர்பார்க்கலாம்.
* பிற டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்றதே இந்த எஸ்.ஐ. தேர்வும். இன்னும் சொல்லப் போனால் அதை விடவும் எளிமையாக இருக்கும். அதிகபட்சம் 90 வினாக்களுக்கு குறைவில்லாமல் சரியாக விடையளித்தால் எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைத்துவிடும்.
* தினமும் செய்தித்தாள் படிப்பவர்கள் இந்தத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். பழக்கம் இல்லாதவர்கள் இனியேனும் அந்தப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடிப்படை கணித சூத்திரங்களை தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
* இன்னும் 2 மாத காலங்களுக்கு மேல் அவகாசம் உள்ளது. தைரியத்தையும், தன்னம்பிக் கையையும் மனதில் இருத்தி இன்றே செயல்படத் தொடங்குங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.
இளநிலை வடிவமைப்புப் பட்டம் படிக்க UCEED 2019 நுழைவுத் தேர்வு!
10/24/2018 3:17:14 PMஇளநிலை வடிவமைப்புப் பட்டம் படிக்க UCEED 2019 நுழைவுத் தேர்வு!
இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி பாம்பே (IIT – Bombay), ஐ.ஐ.டி கவுஹாத்தி (IIT – Gawhati), ஐ.ஐ.டி.டி.எம். ஜபல்பூர் (IITDM – Jabalpur) ஆகியவற்றில் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (Bachelor of Design – B.Des) கற்பிக்கப்படுகிறது.
ஆடை தொடங்கி ஆகாய விமானம் வரை வடிவமைப்புப் படிப்புக்கான தேவை உள்ளது நாம் அறிந்த ஒன்றுதான். இப்பட்டப்படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான (Under Graduate Common Entrance Examination for Design-2019) UCEED-2019-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கத் தகுதி
இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடப் பிரிவு எடுத்து ேதர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க இயலும். 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும், 2019 ஆம் ஆண்டு இறுதித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவினர் அல்லது நான் கிரீமி லேயர் பிற பிற்படுத்தப்பட்டவர் அக்டோபர் 2, 1994 அன்று அல்லது அதற்கு பின்னும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அக்டோபர் 2, 1989 அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும்.
இத்தேர்வை தொடர்ந்து இருமுறை மட்டுமே எழுத இயலும். இத்தேர்வின் மதிப்பெண் ஓர் ஆண்டிற்கு மட்டுமே அனுமதிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.uceed.iitb.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2018. தாமதக் கட்டணமாக ரூ.500 செலுத்தி 16.11.2018 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய அனைத்துத் தரப்பு பெண்கள் ரூ.1,200, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.1,200, மற்றவர்கள் ரூ. 2,400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
சார்க் (SAARC) நாட்டினர் 160 USD, சார்க் நாடு தவிர்த்த மற்ற அயல்நாட்டு மாணவர் 300 USD செலுத்த வேண்டும். துபாய் மையத்தில் தேர்வு எழுத விரும்பும் இந்திய மாணவர்கள் 160 USD செலுத்த வேண்டும்.
அட்மிட் கார்டு 1.1.2019 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த அட்மிட் கார்டில் ஏதேனும் தவறு இருப்பின் 5.1.2019-க்குள் சரி செய்துகொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு
கணினி வழியான இத்தேர்வு 19.1.2019 அன்று முற்பகல் 10 மணிக்கு தேர்வு நடைபெறும். இது 3 மணி நேரத் தேர்வாகும். ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளில் 3 பிரிவுகளுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும்.பிரிவு A : (Numerical Answer Type) நியூமரிக்கல் ஆன்ஸர் வடிவமாகும். இதற்கு வெர்ச்சுலர் கீ வழியாக விடை தரவேண்டும்.
பிரிவு B : சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். விடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் இருக்கும்.
பிரிவு C: ஒரே ஒரு சரியான விடையுள்ள ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையில் இருக்கும்.
நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம்
இத்தேர்வை எதிர்கொள்ள பின்வரும் பாடத்திட்டங்களை படிக்க வேண்டியது அவசியமாகும்.
VISUALIZATION AND SPATIAL ABILITY
Pictorial and diagrammatic questions to test, understanding of transformation and/or manipulation of 2D shapes and 3D objects and their spatial relationships, knowledge of practical and everyday mechanical and scientific concepts.
OBSERVATION AND DESIGN SENSITIVITY
Ability to detect concealed properties in ordinary things, people, situations, and events, and thinking critically about them. Applying attention to certain details, analysing, reasoning, classifying, inferring and predicting. Ability to discern subtle differences in visual properties and aesthetic outcomes.
ENVIRONMENTAL AND SOCIAL AWARENESS
General awareness of environmental factors such as climate, population, water, vegetation, pollution, weather, natural resources etc., and their implications on the design of products, images, infrastructure and environment. Awareness of social and cultural connection with design, history of the designed artefact, and socially responsible and environmentally sustainable design responses. History of art, sculpture and literature.
ANALYTICAL AND LOGICAL REASONING
Ability to look at information, be it qualitative or quantitative in nature, and discern patterns within the information. Ability to weigh opinions, arguments or solutions against appropriate criteria. Ability to check for hidden bias or hidden assumptions and whether evidence and argument support conclusions. Ability to use logic and structured thinking to deduce from a short passage, which of a number of statements is the most accurate response to a posed question. Data Interpretation, brainteasers, and patterns.
LANGUAGE AND CREATIVITY
Ability to understand and use Standard English. Reading comprehension, knowledge of English grammar. Ability to think creatively in terms of alternatives, ability to distinguish innovative options and think out of the box.
DESIGN THINKING AND PROBLEM SOLVING
Ability to use visual analogies, metaphors, signs and symbols. Ability to understand complexity, identify problem, generate alternatives, evaluate options and select solutions.
மேற்கொண்டு முழு விவரங்களை அறிய www.uceed.iitb.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.
ஓ.என்.ஜி.சி. வழங்கும் கல்வி உதவித்தொகை
1000 மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு 48,000 ரூபாய்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation Limited) பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு என்று ஐந்து பகுதிகளாகப் (Zone) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 200 மாணவர்கள் வீதம் மொத்தம் 1000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிடத் திட்டமிட்டிருக்கிறது.
உதவித்தொகை எண்ணிக்கை நான்காண்டு கால அளவிலான பொறியியல் (B.E/B.Tech) – 400, மருத்துவம் (MBBS)-100, இரண்டாண்டு கால அளவிலான முதுநிலை புவியியல்/புவி இயற்பியல் (M.Sc Geology/Geophysics) – 200, முதுநிலை மேலாண்மை (MBA) – 100 என்று படிப்புகள் வழியில் பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.4000 வீதம் வருடத்திற்கு ரூ.48000 உதவித்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
தேவையான தகுதிகள்
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையி லிருக்கும் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான்காண்டு கால அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் முதல் வருடம் படிக்கும் மாணவர்களும், இரண்டாண்டு கால அளவிலான புவியியல்/புவி இயற்பியல் மற்றும் மேலாண்மை முதுநிலைப் படிப்புகளில் முதல் வருடம் படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த உதவித்தொகை இந்தியாவில் படிக்கும், இந்தியக் குடியுரிமையுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி வகுப்பில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமலும், முதுநிலை புவியியல்/புவி இயற்பியல் மற்றும் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளுக்கு, இளநிலைப் பட்டப்படிப்பில் அனைத்து வருடங்களையும் சேர்த்து 60% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்களுக்கான பகுதி (Zone) மாணவர்கள் படிக்கும் கல்லூரி/பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தைக் கொண்டு முடிவு செய்யப்படும். விண்ணப்பதாரர்களின் மொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
இதற்கான வருமானச் சான்றிதழினை வருவாய்த்துறையில் வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத அதிகாரிகளிடம் பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 1-9-2016 அன்று 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற நிதி அமைப்புகளிலிருந்து இப்படிப்புக்காக வேறு உதவித்தொகை எதுவும் பெறாதவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் டிசம்பர் 2016 மாதக் கடைசியில் http://www.ongcindia.com/எனும் இணையதளத்தில் வெளியிடப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்திலோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிறுவனத்திலோ பணியாற்றுபவர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பித்தவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உதவித்தொகைக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பெண் சமமாக இருக்கும் நிலையில், அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் கணக்கிடப்பட்டுக் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். மேலும் இந்த உதவித்தொகைக்கு, வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பத்து மாணவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
உதவித்தொகை விவரம்
இந்த உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.4000 வீதம் கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ48.000 அவர்களின் வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் முறையில் செலுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன், தங்களுக்கான வருமான வரிக்கான நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) அளிக்க வேண்டியிருக்கும்.
உதவித்தொகை பெறுபவர்கள் ஒரு வருடப் படிப்பு நிறைவுக்குப் பின்பு, அடுத்த வருடப் படிப்புக்குச் சென்றதை உறுதிப்படுத்தும் விதமாகத் தாங்கள் படிக்கும் கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ் பெற்று, உதவித்தொகை பெறுவதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
உதவித்தொகை பெறுபவர்கள், இதே காலத்தில் வேறு உதவித்தொகை பெறுவது தெரியவந்தால், உதவித்தொகை நிறுத்தப்படுவதுடன், முன்பு பெற்ற உதவித்தொகையினையும் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் http://www.ongcindia.com/ எனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 10.10.2016.அதன் பின்னர் இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, அதை அச்சிட்டு எடுத்து விண்ணப்பத்திலும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களின் நகல்களிலும் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைவர் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
அனுப்பப்படும் உறையின் மேல் “ONGC Scholarship Scheme for Economically Backward General and OBC Category Students” என்று மேல்பகுதியில் குறிப்பிட்டு ‘Post Box No-2091, Chennai- 600020, Tamil Nadu (INDIA)’ எனும் முகவரிக்கு 31.10.2016ம் தேதிக்குள் சென்றடையும்படி அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் உதவி எண்களில் +91-7550004137 (ஆங்கிலம்), +91-7550004136 (இந்தி) தொடர்புகொண்டு பெறலாம்.
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி
– தேனி மு.சுப்பிரமணி
தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணிகள்
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட், டெக்னிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Scientist ‘C’: (Programming): 1 இடம் (பொது). வயது: 40க்குள்.
2. Scientist ‘B’: (Bio-chemistry): 1 இடம் (எஸ்சி-மாற்றுத்திறனாளி): வயது: 35க்குள்.
3. Scientist ‘B’: (Social & Behavioural Sciences): 1 இடம் (எஸ்டி) வயது: 35க்குள்.
4. Scientist ‘B’: (Medical) NIRT-Epidemiology Unit: 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
5. Technical Officer-B: 10 இடங்கள்: (பொது-7, எஸ்சி-1, ஒபிசி-2). வயது: 35க்குள்
6. Technical Officer-B NIRT-Epidemiology Unit: 1 இடம் (பொது). வயது: 35க்குள். மாதிரி விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி,
விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.nirt.res.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 30.10.2018.
சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் வேலை
சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் வேலை மும்பை மற்றும் புனேயில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் உதவி மேம்பாட்டு அலுவலர், பிரிவு அலுவலர், ஸ்டெனோகிராபர் ஆகிய 18 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:
1. Assistant Development Commissioner: 8 இடங்கள்.சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.2. Section Officer (Accounts): 4 இடங்கள்.சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.3. Stenographer (Grade III): 6 இடங்கள்.சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.seepz.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.10.2018.
பிஇ படித்தவர்கள் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் இன்ஜினியர் ஆகலாம்
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் உதவி நிர்வாக இன்ஜினியர் உதவி நிர்வாக இன்ஜினியர் ஆகிய இடங்கள் காலியாக உள்ளன.
பணி விவரம்:
1. Assistant Executive Engineer (Civil): 11 இடங்கள் (பொது-7, ஓபிசி-3, எஸ்டி-1). இவற்றில் ஒரு இடம் செவித்திறன் குறைந்தோருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., வயது: 15.02.2019 அன்று 21 முதல் 30க்குள்.
2. Assistant Executive Engineer (Electrical & Mechanical): 3 இடங்கள் (பொது). தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜனியரிங் பாடத்தில் பி.இ., வயது: 15.02.2019 அன்று 21 முதல் 30க்குள்.
விண்ணப்பதாரர்கள் கேட்-2019 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2019.
ஜிமேட் தேர்வு-GMAT Exam
உலகில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வணிகம் அல்லது மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு, கிரஜூவட் மேனேஜ்மென்ட் ஆட்மிஷன் டெஸ்ட் எனும் ‘ஜிமேட்’.
முக்கியத்துவம்
உலகம் முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்தேர்வு, கணினி வழித்தேர்வாக மட்டுமே நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மொத்த மதிப்பெண் 800. இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
பிரிவுகள்: அனலிட்டிக்கல் ரைட்டிங், இன்டக்ரேட்டட் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல் ஆகிய 4 முக்கிய பிரிவுகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப இந்த நான்கு பகுதிகளையும் தேர்வு எழுதும் மாணவர்களே, வரிசைப்படுத்திக் கொள்ளும் ‘செலக்சன் ஆடர்’ எனும் புதிய நடைமுறையை இத்தேர்வை நடத்தும், ‘ஜிமேக்’ அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
தகுதி: இந்தத் தேர்வினை எழுத வயது வரம்பு ஏதுமில்லை. இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. வேறு எந்தச் சிறப்பு தகுதிகளும் இல்லை.
சேர்க்கை முறை: சில கல்வி நிறுவனங்கள் ‘ஜிமேட்’ தேர்வில் மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்வி நிறுவனங்கள், இந்த நான்கு பிரிவுகளில் குறிப்பிட்ட ஒன்றோ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. ஆகையால், மாணவர்கள், எந்தக் கல்லூரியில் சேர்க்கை பெற விரும்புகிறீர்களோ அந்தக் கல்லூரியின் சேர்க்கை முறைக்கேற்ப தேர்விற்கு தயாராவது சிறந்தது!
தேர்வு முறை:
பிரிவு: அனலிட்டிக்கல் ரைட்டிங்
கேள்விகள்: 1 தலைப்பு
நேரம்: 30 நிமிடம்
பிரிவு: இன்டக்ரேட்டட் ரீசனிங்
கேள்விகள்: 12 கேள்விகள்
நேரம்: 30 நிமிடம்
பிரிவு: குவான்டிடேடிவ்
கேள்விகள்: 31 கேள்விகள்
நேரம்: 62 நிமிடம்
பிரிவு: வெர்பல் ரீசனிங்
கேள்விகள்: 36 கேள்விகள்
நேரம்: 65 நிமிடம்
மொத்த தேர்வு நேரம்: 3:30 மணி நேரம் (இடைவேளை உட்பட)
இந்தத் தேர்வின் மதிப்பெண்கள், ஐந்து ஆண்டுகள் வரை செல்லும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்தத் தேர்வை எழுதலாம். ஒரு வருடத்திலேயே 30 நாட்கள் இடைவேளையில், 5 முறை இந்தத் தேர்வை எழுத முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகள் எதுவும் இல்லை. அடுத்த 6 மாதங்களில் உள்ள எந்தத் தேர்விற்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு: www.gmac.com
12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்
தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.12-ம் வகுப்பு முடித்தவுடன் பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பிகாம்.,பி.எட். ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்.பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி, பள்ளியில் படிக்கும்போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்தவுடன் நேரடியாக பி.எட். சேர முடியும் என தெரிவித்தார். ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இதுபோன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
PRESIDENT KOVIND TO INAUGURATE ‘INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL’ ON 6 OCTOBER
President Ram Nath Kovind will inaugurate the fourth “India International Science Festival (IISF)” on October 6, it was announced on Monday.”All stakeholders will assemble to collectively work towards ‘Vigyan se Vikas’ — contributing to the Making of a New India as envisioned by Prime Minister Narendra Modi who is taking forward the legacy of late Atal Ji,” Harsh Vardhan said, according to a statement.
“IISF-2018 is expected to be represented by approximately 10,000 delegates including 5,000 students, 550 teachers, 200 students from North East Region, 20 international delegates and approximately 200 startups,” the statement said.
Vajpayee is known to hail science through his slogan “Jai Vigyan” that added to an already popular “Jai Jawan, Jai Kisan” slogan given by another former Prime Minister Lal Bahadur Shastri.
Speaking at the curtain raiser of the event, Minister for Science and Technology Harsh Vardhan dedicated the festival to former Prime Minister Atal Bihari Vajpayee, for bringing “science to the centre stage of national agenda”.
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை!
மத்திய மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படும், ‘சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப்’ (சி.எஸ்.எஸ்.எஸ்.,) உதவித்தொகைக்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்:
2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வில் 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, 2017-18 கல்வியாண்டில், உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை:
இளநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1000, முதுநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.2000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2017
மேலும் விவரங்களுக்கு: http://mhrd.gov.in/scholarships
அமேசானில் 18,000 வேலை வாய்ப்புகள்.. வேலையை எப்படிப் பெறுவது..!
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 17,823 முழு நேர ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. தற்போது அமேசான் நிறுவனத்தில் 5,60,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமேசான் நிறுவனமானது இ-காமர்ஸ் மட்டும் என்பது மட்டும் இல்லாமல் மளிகை பொருட்கள் விற்பனை, மருந்து பொருட்கள் விற்பனை போன்றவற்றிலும் தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ளது. உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்திற்கு மிகப் பேரிய அளவிலான ஊழியர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் அதனைப் பெறுவதும் அவ்வளவு எளிய காரியம் அல்ல என்கின்றனர்.
அமேசான் நிறுவனத்தின் ஊழியராக வேண்டும் என்றால் முதலில் இணையதளத்தில் உள்ள வேலை வாய்ப்புப் பக்கத்தினை நன்கு ஆராய வேண்டும். பின்னர்ப் பலகலைக்கழக வேலை வாய்ப்பு, இராணுவ வேலை வாய்ப்பு மற்றும் பிற வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அமேசான் நிறுவனத்தில் உள்ள இந்தப் பணியிடங்களில் சேர நிறுவனம் சார்ப்பில் அதற்கான கூடுதல் ஆதரவாகத் திறன் மேம்படுத்துதல் மற்றும் அனுபவம் பெற்றல் போன்றவையும் அளிக்கப்படுகிறது. மேலே கூறிய திட்டங்களில் உங்களால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் இணையப் பக்கத்தில் உள்ள பல நேரடி வேலை வாய்ப்பு அறிவிப்புகளின் கீழும் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் தற்போது உள்ள காலியிடங்கள் தற்போது இந்திய அமேசான் அலுவலகங்களில் பெங்களூரு கிளையில் 485 நபர்களுக்கு, சென்னையில் 85 நபர்களுக்கு, டெல்லியில் 13 நபர்களுக்கும், ஹைதராபாத்தில் 269 நபர்களுக்கும் மும்பையில் 47 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல் கூறுகின்றன.
விண்ணப்பிக்கும் முன் அமேசான் பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முன் நிறுவனத்தின் 14 தலைமை கொள்கைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு கலந்துரையாட வேண்டும். அதில் முக்கியமான ஒன்று வாடிக்கையாளர் தொல்லையாகும். இது போன்று பல வகையில் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது? அமேசான் பணிகளுக்கான இணையதளமானது எப்படி விண்ணப்பிப்பது மற்றும் நேர்காணல் எப்படி இருக்கும் என்ற வழிமுறைகளை அளிக்கும். முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ரெக்காரட் வீடியோ ஸ்கிரீன் அல்லது போன் ஸ்க்ரீன் முறையில் நேர்காணல் நடைபெறும். நேர்காணலின் போது வேலைக்கு விண்ணப்பித்தவர்களும் கேள்விகளைக் கேட்கலாம்.நேர்காணல் இவற்றுக்குப் பிறகு 3 அல்லது 4 நபர்கள் முன்னிலையில் கேள்விகள் கேட்கப்படும். இந்த நேர்காணளின் போது டிரிக்கான கேள்விகள் ஏதும் இருக்காது. எளிதாக இதில் கலந்துரையாடலாம். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக ஆர்வமாக நிறையக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர்களைத் தான் நிறுவனம் பணிக்க எடுக்க விரும்பும் என்றும் தெரிவித்துள்ளனர்.
3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
சென்னை:மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, ‘கட் — ஆப்’ பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17ம் தேதியும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 18; மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு, 19 மற்றும் 20ம் தேதியும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்
துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ம் தேதி தொடங்குகிறது .
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., – பி.ஓ.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 10ல் துவங்கி, 19ல் முடிகிறது.மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆராய்ச்சி செய்யாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு-இல்லை
ஆராய்ச்சிகளில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை’ என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும் கட்டடவியல் மேலாண்மை கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர்களாகவும்; இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு களில், பதவி உயர்வு வழங்கியதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என, உயர் கல்வித் துறை கண்டறிந்துள்ளது.அதனால், இந்த ஆண்டு முதல், பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.இது குறித்து, கடந்த வாரம், அண்ணா பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, ‘பதவி உயர்வுக்கு தகுதி பெறும், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பில், குறைந்தபட்சம், ஒரு மாணவரையாவது உருவாக்க வேண்டும்.
‘யு.ஜி.சி., அங்கீகரித்த பிரபலமான ஆய்வு இதழ்களில், குறைந்தபட்சம், இரண்டு ஆய்வு கட்டுரை கள் வெளியிட்டிருக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தோர் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, சுயமாக முடிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 1,884 பேர், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 600 பேருக்கு மட்டுமே, புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.
These 7 new IIMs will get permanent campuses by June 2021
The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi has approved the establishment and operationalisation of permanent campuses for seven new Indian Institutes of Management (IIMs).
According to reports, the institutes will get permanent campuses by June 2021 at a cost of over Rs 3,775 crore.
(Read: Students from IITs, IIMs bag over 100 per cent higher salary packages than any other engineer or MBA graduate: Survey)
The institutes are in Amritsar, Bodh Gaya, Nagpur, Sambalpur, Sirmaur, Vishakhapatnam and Jammu.
Campus-wise allotment of funds:
Moreover, Union HRD Minister Prakash Javadekar in a tweet has shared the amount that will be given for the establishment of the permanent campuses.
JEE (Main) 2019 merit list to be based on percentile scores, check details here
senior HRD Ministry official has recently confirmed that the merit list for the Join Entrance Exam (JEE) Main will be based on percentile scores and not on raw marks.
“Normalisation procedure based on percentile score” to arrive at the NTA score will be used, the senior HRD official told TOI.
“A core group of experts from IITs (Roorkee, Kanpur, Delhi, Guwahati), IIM-Lucknow, NITs, UGC, IASRI (Pusa) and AIIMS, Delhi, among others have been asked to finalise the process for calculating the NTA score,” the official added.
(Read: Good news for JEE, NEET aspirants! Modi govt to give free coaching for competitive exams)
JEE (Main) to be held twice a year:
The Human Resource Development (HRD) Minister Prakash Javadekar has recently announced that the National Eligibility cum Entrance Test (NEET) and Joint Entrance Exam (JEE) will be conducted twice in a year from 2019.
Further, the examination will be held in online mode from next year.
NTA replaces CBSE:
From now onwards, the newly formed National Testing Agency (NTA) would now conduct the national- level examinations like NET, NEET, JEE (Mains) that were organised by the Central Board of Secondary Education (CBSE)
In major changes announced, Prakash Javadekar, the Union HRD minister, has also said that the Graduate Pharmacy Aptitude Test (GPAT) and Common Management Admission Test (CMAT), which will be conducted by NTA from next year
JEE (Main) Registration:
Meanwhile, the National Testing Agency (NTA) has started the online registration process for the Test JEE (Mains) 2019 on its official website, the link for which is nta.ac.in
Detailed schedule:
JEE Main I:
Online submission of application forms: September 1 to September 30, 2018
Downloading of admit cards: December 17, 2018
Dates of examination: January 6 to January 20, 2019
Result declaration: January 31, 2019
JEE Main II
Online submission of application forms: February 8 to March 7, 2019
Downloading of admit cards: March 18, 2019
Dates of examination: April 6 to April 20, 2019
Result declaration: April 30, 2019
(Read: JEE Main 2019: Check schedule, important dates and eligibility criteria here)
Selection procedure for admission to IIT:
All those candidates who have successfully cleared the JEE (Mains) will be eligible to appear for the JEE Advanced exam round. Students will be allotted colleges on the basis of these two written exams.
About JEE Main:
The Joint Entrance Exam is conducted every year for candidates seeking admissions in undergraduate engineering programmes in the prestigious IITs, NITs, IIITs and various other CFTIs (Centrally Funded Technical Institutions) across the country.
Read: NTA starts UGC NET, NEET, JEE Main registration for test practice centre: Apply now @ nta.ac.in
Read: No change in exam system for JEE Advanced, decides IIT council
கல்விமருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி
படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் அந்த வேலை அவர்களுக்கு எளிதாக இருப்பதோடு, அதில் முழு விருப்பத்தோடு பணியாற்றவும் முடியும். ஆனால், படித்தது ஒன்று பார்க்கும் வேலை மற்றொன்று என்றே இன்றைக்கு ஏராளமானோர் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையைப் போக்கும் முயற்சியாக மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்தவர்கள் அதே துறை சார்ந்த கணினி வழி வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்து வருகிறது ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் புராஜெக்ட்ஸ் – தலைமைத் துணைத் தலைவர் பாஸ்கரன் கோபாலனின் ஊடகத்திற்கு வழங்கிய செய்தி அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார்.“ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம் மெடிக்கல் அவுட்சோர்ஸிங் அதாவது, மருத்துவ சுகாதாரப் பணிகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. 2004ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது சென்னை, திருச்சி, பீமாவரத்திலும், வெளிநாடுகளில் பிலிப்பைன்ஸில் மணிலா, செபு என மொத்தம் 6 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்ட இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள ஹெல்த் கேர் நிறுவனங்கள் 100க்கும் மேல் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கான ஹெல்த் கேர் அவுட்சோர்ஸிங் பணிகளான மெடிக்கல் கோடிங், சார்ஜ் என்ட்ரி, பேமன்ட் போஸ்டிங், அக்கவுன்ட்ஸ் ரிசிவபிள் அனாலிசிங் மற்றும் நிர்வாகம், மருத்துவ வருவாய்ச் சுழற்சி மேலாண்மை உள்ளிட்ட சுகாதார நிர்வாகப் பணிகள் குறித்த அனைத்து வேலைகளைச் செய்துகொடுத்து வருகிறது. எங்கள் நிறுவனத்தில் தற்போது 12,000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்” என்று பெருமிதத்தொடு கூறுகிறார் பாஸ்கரன்.
மேலும் அவர் கூறுகையில், “மருத்து வத்தில் Nursing, M.Pharm, B.Pharm, Ph.D, BDS, MDS, BAMS, BHMS, BUMS, BPT, MPT, BOT, MOT, M.Sc, B.Tech, B.Sc, B.Tech, Ph.D, M.Sc, B.Sc, Biotechnology /M.Sc, B.Sc Microbiology/ M.Sc, B.Sc Biochemistry, M.Sc, B.Sc Biology, Bio- Medical graduates, Zoology, Botany, Bio-informatics, Endocrinology, Nutrition & Dietetics, Anatomy and physiology, Health Education 3rd year students ஆகிய படிப்புகளைப் படித்தவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு.
ஏனெனில், இந்நிறுவனம் மூன்று விதமான பணிகளைச் செய்துவருகிறது.
1. டேட்டா என்ட்ரி, 2.வாய்ஸ் பிராசஸ் (பெரும்பாலும் இரவுப் பணி, அமெரிக்க நேரப்படி பணி இருக்கும்), 3. மெடிக்கல் கோடிங் (பகல்நேரப் பணி). எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். டேட்டா என்ட்ரி வேலைக்கு பிளஸ் 2 படித்திருந்தாலே போதும். வேகமாக டைப் செய்யக்கூடியவராக இருக்க ேவண்டும், வேலைக்கான வாய்ப்பு உண்டு.
மெடிக்கல் கோடிங் வேலைக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிப்புகள் படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வழங்கப்படும். வாய்ஸ் பிராசஸ் வேலைக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஆங்கிலம் பேசப் புரிந்து கொள்ளத் தெரிந்திருந்தால், அமெரிக்கர்களுடன் பேசுவதற்கான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வழங்கப்படும். இந்த மூன்றும்தான் பணியில் சேருவதற்கான அடிப்படைத் திறன் செயல்பாடு” என்கிறார்.
பயிற்சி முறை மற்றும் வேலைவாய்ப்பு குறித்துக் குறிப்பிடும்போது, “பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் எங்கள் www.omcacademy.com என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் வந்து விண்ணப்பித்தால் டெஸ்ட் வைத்து தேர்வு செய்வோம். இப்படித் தேர்வு செய்யப்படும் அனைவரும் பணியில் உடனடியாகச் சிறந்துவிளங்க முடியாது. இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே ஒமேகா மருத்துவக் குறியீட்டு அகாடெமி என்ற அகாடெமி வைத்துள்ளோம். இந்த அகாடெமியில் சேர்க்கப்பட்டு மெடிக்கல் கோடிங் பயிற்சி (60 நாட்கள்) சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது. இதற்குச் சிறு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஏனென்றால், இங்குப் படித்தவர்கள் இதுபோன்று வேறு எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் அதன்பிறகு எளிதாகப் பணியில் சேர்ந்துவிட முடியும். ஆனால், பயிற்சிக்குப் பின்னர் ஒரு தேர்வு நடத்தி எங்கள் நிறுவனத்திலேயே வேலையில் அமர்த்திவிடுவோம். ஒரு வருடம் தொடர்ந்து வேலை பார்த்துவரும் நிலையில், பயிற்சியின்போது அவர்கள் செலுத்திய தொகை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்.
இந்த மெடிக்கல் கோடிங் அகாடெமி திருச்சி, சென்னையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 2000 பேருக்குப் பயிற்சி அளித்து, அதில் 1900 பேரை எங்கள் நிறுவனத்திலேயே பணியில் அமர்த்தியுள்ளோம். மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவமனைகளிலோ மற்றும் பார்மஸிகளிலோ வேலை கிடைக்கவில்லையே என்று இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையில் பணியாற்றலாம். மேலும் விவரங்களுக்கு www.omegahms.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்” என்று மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கான அற்புதமான வாய்ப்பு குறித்து கூறி முடித்தார்.
தமிழக 3,003 பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து
தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு நிதி அளிக்கிறது.தமிழகத்திலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு, நிதி உதவி அளிக்கப்படுகிறது.அந்த வகையில், தமிழக அரசின் சார்பில், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச திட்டங்களுக்கு, 2,838 கோடி ரூபாய் நிதி, மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.இதில், தமிழக பள்ளிகளில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1,422 கோடி ரூபாய் நிதியை, முதற்கட்டமாக ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, 32 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் அமைப்பது, மாணவ -மாணவியருக்கு, இலவசகல்வி உபகரணங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை, தமிழக பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், குறைந்தபட்சம், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, நிதி வழங்கப்படும்என, மத்திய அரசுஅறிவித்தது.அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 31 ஆயிரத்து, 266 தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ளதாக, 28 ஆயிரத்து, 263 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளுக்கு மட்டும், மத்திய அரசின் நிதியை, தமிழக அரசு பெற்றுள்ளது. மீதமுள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதி உதவி ரத்து