எச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்!
மெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்டு வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம் என்பதற்காக எச்4 என்ற விசா முறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எச்-1பி விசா முறையில் பல திருத்தங்களை டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வரும் நிலையில் தற்போது எச்4 EAD விசா முறையினை 3 மாதத்தில் திரும்பப் பெறுவோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.எச்4 விசா என்றால் என்ன? வெளிநாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரியும் ஒருவர் அவரது மனைவி மற்றும் 21 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வர வழிவகைச் செய்வதே எச்4 விசாவின் நன்மையாகும். இந்த எச்4 விசாவினை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் ஆணையம் வழங்குகிறது.3 மாதம் எச்-பி விசா கீழ் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை அமெரிக்க அழைத்துச் செல்ல உதவும் எச்-4 விசா முறையினை 3 மாத்தில் நீக்குவோம் என்றும் நீதி மன்றத்தில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.ஒபாமா காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையில் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பெரும் அளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் அதனை நீக்க டிரம்ப் தலைமையிலான அரசு மிகப் பெரிய அளவில் முயற்சி எடுத்து வருவதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.எனவே எச்-4 விசா கீழ் அமெரிக்காவில் உள்ளவர்களைத் திருப்பி அனுப்புவது மட்டும் இல்லாமல் புதியதாகவும் தங்களைச் சார்ந்தவர்களை எளிதாக அழைத்துச் செல்ல முடியாத நிலையை இந்தத் திருத்தம் உருவாக இருக்கிறது. இதனை வெளிப்படையாகவே நீக்க இருப்பதாகவும் அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.எச்4 விசாவை நீக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் இதனை நீக்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் முழுமையாக நீக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளது.
எச்-4 விசா எண்ணிக்கை 2017 டிசம்பர் மாதம் வரை 1,26,853 நபர்கள் எச்-4 விசா கீழ் அமெரிக்காவில் உள்ளனர். 2015-ம் ஆண்டு முதல் எச்4 விசா கீழ் எச்-1பி விசா ஊழியர்களினை சார்ந்துள்ளவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்ல இது உதவியாக இருந்தது.எச்-4 விசா கீழ் 90 சதவீதம் இந்தியர்களும், 5 சதவீதம் சீனர்களும், மீதமுள்ள நாடுகளில் இருந்து 5 சதவீதத்தனரும் அமெரிக்காவில் உள்ளனர். டிரம்ப் அரசின் இந்த முடிவால் தங்கள் குடும்பத்தினரை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64550-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64550-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64549-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64548-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64547-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64546-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64546-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64544-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

Read more at: https://tamil.goodreturns.in/world/trump-administration-remove-work-permits-h4-visa-holders-within-3-months/articlecontent-pf64544-012668.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles

நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி

வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது.

டிரம்ப்க்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் அடக்கம்.

அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயல்வதற்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் குழந்தைகள்


ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் மீது புகார்

வேலைவாய்ப்பு விளம்பரங்களில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் அமெரிக்க வேலைவாய்ப்பு சமத்துவ ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இந்தப் புகாரில், ஃபேஸ்புக்கில் வெளியான 10 வேலைவாய்ப்பு விளம்பரங்கள் 25 முதல் 35 வயது வரையிலான ஆண்களை மட்டுமே இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது சுட்டிக்கப்பட்டுள்ளது.

ஒஹையோ, பென்சில்வேனியா, இல்லினோ ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு இந்த விளம்பரங்கள் தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள். பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத கடும் புயல் அமெரிக்கா சந்திக்கிறது

அமெரிக்க கிழக்கு கடல் பகுதியை பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவ அணிவகுப்பு

ராணுவ அணிவகுப்புக்கான பணிகளை ரஷ்யா துரிதப்படுத்தி உள்ளது. பனி போருக்குப் பின் ரஷ்யாவில் நடக்கும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இதுவாகும். கிழக்கு சைப்பீரியாவில் நடக்க இருக்கும் இந்த அணிவகுப்பில் 3 லட்சம் படை வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள். சீனா 3200 துருப்புகளை அனுப்புகிறது. மங்கோலியாவும் இந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்ள படைகளை அனுப்புகிறது. நாடோவுக்கும் ரஷ்யாவுக்குமான முரண்கள் வளர்ந்து வரும் இந்த சூழலில் இந்த அணிவகுப்பு நடக்க இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்

மாருதி சுசுகி நிறுவனம் புது டெல்லியில் எலெக்ட்ரிக் மாடலின் ப்ரோடோடைப் வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய மாடலின் பெயரை அறிவிக்கா நிலையில், புதிய மாடல் ப்ரோடோடைப் இ.வி. என அழைக்கப்படுகிறது. இது பார்க்க ஜப்பானில் விற்பனையாகி வரும் வேகன் ஆர் போன்று காட்சியளிக்கிறது.

இந்த மாடலின் வடிவமைப்பு ஜப்பானில் விற்பனை செய்யப்படும் வேகன் ஆர் ஸ்டான்டர்டு மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் ஸ்டான்டர்டு வேரியன்ட் வேகன் ஆர் 2017 ஜனவரி முதல் விற்பனை செய்யப்படுகிறது. வேகன் ஆர் இ.வி. மாடலில் ஸ்பில்ட் ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில் இடம்பெற்றிருக்கிறது.முன்பக்க பம்ப்பரில் பெரிய கிரில் பகுதி இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டுகளில் சிறப்பான வடிவமைப்பு அம்சங்கள் புதிய பி=பில்லர் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது. இதன் விங் மிரர் இம்முறை கதவில் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் டெயில்கேட் சன்கென் டெயில்-லேம்ப்களுடன் பின்புற பம்ப்பரின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வேகன் ஆர் இ.வி. மாடல் ஏப்ரல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய மாடலின் சிறப்பம்சங்கள் சார்ந்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் காரில் எம்.ஆர்.எஃப். டையர்கள் கொண்டிருக்கிறது. #MarutiSuzuki
டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் – மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ளார், அதில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் கோரிக்கை வைத்துள்ளார் உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கிடையே கடந்த 5-ம் தேதி வடகொரியா ஜனாதிபதியை தென் கொரியாவை சேர்ந்த உயர் நிலைக்குழு சந்தித்து பேசியது.

அப்போது, அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் எனவும் கிம் ஜாங் உன் கூறியதாக தெரிகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் அன் நடத்தி முடித்தார்.

அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், நாம் இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் என நினைப்பவர்களின் எண்ணங்கள் தவறானது என நாம் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-

கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *