ஹூஸ்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரியாக கொண்ட ெடஸ்லா மின்சார வாகன நிறுவனம், ‘ஆட்டோபைலட்’ குழுவை புதியதாக உருவாக்கி வருகிறது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல்வ நபராக அசோக் எல்லுச்சாமி, தலைமை பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து எலன் மஸ்க் தனது டிவிட்டரில் ‘சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதன்படி எங்களின் மின்சார வாகன நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் ஊழியராக அசோக் எல்லுச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் இக்குழுவின் தலைவராக செயல்படுவார்’ என்று கூறியுள்ளார். அசோக் எல்லுச்சாமி, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் இளங்கலைப் பட்டமும், கார்னகி மெலன் பல்கலைக் கழகத்தில் ரோபாட்டிக்ஸ் சிஸ்ட்ம் மேம்பாட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் வோக்ஸ்வாகன் மின்னணு ஆயுவு கூடத்திலும், வாப்கோ வாகனக் கட்டுப்பாட்டு நிறுவனத்திலும் இதற்கு முன்பு பணியாற்றி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *