இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’

நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்த செய்தியை ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மார்பக புற்றுநோயை தவிர பெரும்பாலான புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு வயது சார்ந்த காரணங்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், 1990 முதல் 2016 ஆண்டு வரை நிகழ்ந்த மரணங்களை ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் இந்த செய்தி கூறுகிறது.

தற்போதுள்ள நிலையில் புற்றுநோய் தொடர்பான மரணத்தை தவிர்க்க 20 முதல் 30 மட்டுமே சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதற்கு காரணம் பெரும்பாலான புற்றுநோயாளிகள் தங்களுக்கு நோயின் பாதிப்பு தீவிரநிலையை எட்டியபிறகே மருத்துவரை அணுகுவதாகவும், ஆரம்பநிலையில் பரிசோதனை செய்ய தவறுவதே இதற்கு காரணம் என்றும் மேலும் கூறியுள்ளனர். மேலும் இந்த செய்தியில் இதயம் தொடர்பான நோய்களே உயிர்கொல்லி நோய்களில் முதலிடத்தில் உள்ளது என்றும், அதற்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்திலே புற்றுநோய் இருப்பதாகவும் ஆய்வு செய்தியை மேற்கோள்கட்டி குறிப்பிட்டுள்ளது.

நீரழிவு நோயும் சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக கூறும் இந்த நாளிதழ் செய்தி, தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் நீரழிவு தொடர்பாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *