ராஜா , சேகர் ,, இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனால் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள், கொள்கை அளவில் இருவரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் …அதற்கு அவர்களின் சுழலும் , சமூக அவலங்களும் ஒரு காரணம் …அவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் ….ஒருமுறை ராஜா தன் நண்பனிடம் …கடவுளை நம்புகிறவர்கள் ஏன் திருந்தவே மாட்டேன்கிறார்கள் மூடர்கள் …என்றான் …அதற்க்கு சேகர் …கடவுள் ஆபத்துகளில் காத்தருள்வார் என்று மனிதர்கள் நம்புகிறார்கள் …துன்பத்தில் துணையாக மனிதன் வரமாட்டான் , கடவுள்தான் துணை என்று நம்புகிறார்கள் அதனாலதான் இவர்கள் மூடர்களாகவே இருக்கிறார்கள் …என்று சொன்னான் …அதற்க்கு ராஜா , நாம் ஒருவருக்கொருவர் ஆபத்துகளிலும் , துன்பத்திலும் உதவிக்கொள்ளவேண்டும் …துன்பத்தில் துணையாக மனிதனுக்கு மனிதன்தான் துணை என்பதனை இந்த சமூகத்திற்கு உணர்த்தவேண்டும் …எந்த வேலையிலும் நாம் பிரியக்கூடாது என்று தீர்மானம் எடுத்துக்கொண்டார்கள் …..அதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் …இன்பம் , துன்பம் அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டார்கள் …ஒருமுறை ..சேகருக்கு கடும் காய்ச்சல் …எதோ விஷ காய்ச்சல் என்று மருத்துவர் சொன்னார். உறவினர்கள் கூட , கூடியிருந்து உதவி செய்ய மறுத்துவிட்டார்கள் ….அப்படியே உதவி செய்தவர்கள் அரை மனத்தோடுதான் உதவினார்கள் .. அந்த நேரத்தில் ராஜா அவனை தன உயிரே போனாலும் நண்பனை காப்பாற்றவேண்டுமென்று இரவும் , பகலும் கூடவே இருந்து …அலுவலகம் போகாமல் சில தியாகங்களை செய்து ..காப்பாற்றினான் , மருத்துவர்கள் வியந்தார்கள் ..எங்கள் மருத்துவத்தைவிட உங்கள் அன்பான பணிவிடையே காரணம் என்று பாராட்டினார்கள் . சேகருக்கு மகிழ்ச்சி ..நண்பனின் தியாகதை மனதுக்குள்ளேயே பாராட்டிக்கொண்டான் ….சில மாதங்கள் கழிந்தன ….இப்போது ராஜாவிற்கு உடல் நலம் குன்றியது ….மருத்துவமனையில் ராஜா சேர்க்கப்பட்டான் …இப்போது சேகரின் துணை ராஜாவிற்கு வேண்டும் …சேகர் தன்னுடைய நண்பனின் அனைத்து தேவைகளையும் பார்த்துக்கொண்டான் .
இருந்தாலும் ராஜாவிற்கு சுகம் கிடைக்கவில்லை ….சேகர் மருத்துவரிடம் ராஜாவைப்பற்றி விசாரித்தான் …அதற்க்கு மருத்துவர்கள் ராஜாவிற்கு கேன்சர் என்றும் குணப்படுத்த முடியாது என்றும் ..பேருக்கு மாத்திரை மருந்துகள் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்கள் …அதிக பணம் செலவழிந்தபிறகு …இது ராஜாவுக்கும் தெரிந்தது ..இனி கடவுள்தான் பார்த்து உங்களுக்கு சுகம் தர வேண்டும் என்று மருத்துவர்கள் கைவிரித்த போது ராஜாவின் உறவினர்கள் கடவுளைப்பற்றி சொன்னார்கள் …கடவுளை நம்பினால் குணமடையலாம் என்கிற நிலை ….ராஜா தன் உயிரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நம்பினான் . கோவில்களுக்கு உறவினர்களுடன் ஏறி இறங்கினான் சேகருக்கு இது கோபத்தையும் தன் நண்பன் இப்படி மாறிவிட்டானே என்ற வருத்தமும் இருந்தது ..ராஜாவிடமே இதனை நேரிடையாக கேட்டுவிட்டான் …அதற்க்கு ராஜா …சேகர் நீ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது என்னுடைய பராமரிப்பு உன்னை காப்பாற்றியது . என்னைவிட நீ பலமடங்கு அக்கறையுடன் பார்த்தது கொண்டாய் …ஆனாலும் உன்னாலும் ஏன் மருத்துவராலும் கூட என்னை குணப்படுத்தவும் ஆறுதல் படுத்தவும் முடியவில்லை .. ஆனால் கடவுள் என்ற வார்த்தைதான் என்னை இப்போது ஆறுதல் படுத்துகிறது … இது ஒரு நல்ல அனுபவம் இதனை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்தல்தான் புரியும் என்றான் …..அதற்க்கு சேகர் டேய் நீயும் மூடர்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டாயேடா.!!!! …..என்றான் ..உனக்கு நான் மூடனாக தெரிகிறேன் …எனக்கு நீ மூடனாக தெரிகிறாய் … உன்னையோ , மருத்துவரையோ நான் பார்க்கும்போது இல்லாத ஒரு நம்பிக்கை நான் பார்க்காத கடவுளை நினைக்கும்போது எனக்கு கிடைக்கிறது நண்பா என்றான் ..ராஜா ….சில மாதங்களில் ராஜாவுடைய உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் வியந்தார்கள் .. ஏன். சேகரும் வியந்தான் …ஒரு நம்பிக்கையே ராஜாவிற்கு சுகத்தை தந்தது ….அது அவனுடைய நம்பிக்கையாகவும் இருக்கலாம் ..கடவுளாகவும் இருக்கலாம் ..அவரவரின் புரிதல்தான் பகுத்தறிவு ..
..- அ .பெர்னார்ட்