தமிழ்நாட்டில் முதுநிலை வணிக மேலாண்மை (Master of Business Administration – MBA), முதுநிலைக் கணினிப் பயன்பாட்டியல் (Master of Computer Application _ MCA), முதுநிலைப் பொறியியல் (Master of Engineering – ME), முதுநிலைத் தொழில்நுட்பம் (Master of Technology – M.Tech), முதுநிலைக் கட்டடக்கலை (Master of Architecture – M.Arch) மற்றும் முதுநிலை அமைப்பியல் (Master of Planning – M.Plan) போன்ற முதுநிலைத் தொழில் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான “தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு” (Tamilnadu Common Entrance Test – TANCET 2018) அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி
எம்.பி.ஏ படிப்பிற்கு, 10+2+3 முறை அல்லது 10+3 (பட்டயம்) + 3 முறை அல்லது பி.இ / பி.டெக் / பி.ஆர்க் / பி.பார்ம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.சி.ஏ படிப்பிற்கு 10+2+3/4 முறை அல்லது 10+3 (பட்டயம்) + 3 முறை அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பிலும், எம்.சி.ஏ (நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை) படிப்பிற்கு பி.சி.ஏ, பி.எஸ்சி (கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம். பிளான் படிப்புகளுக்கு பி.இ / பி.டெக் / பி.ஆர்க் அல்லது பி.பார்ம் அல்லது குறிப்பிட்ட படிப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுநிலைப்பட்டம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் படிப்புகளில் 50 சதவிகிதத்திற்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்கள் போதுமானது.

நுழைவுத் தேர்வு
மேற்காணும் படிப்புகளில் எம்.பி.ஏ எம்.சி.ஏ மற்றும் எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம். பிளான் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என மூன்று பிரிவிலும் நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/tancet2018 எனும் இணைய தளத்திற்குச் விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பத்தில் மூன்று தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தேர்வுக்கும் பொதுப்பிரிவினர் ரூ.500/- எஸ்.சி / எஸ்.சி.ஏ / எஸ்.டி ரூ 250/- கட்டணத்தை இணையம் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23-4-2018.

தேர்வு மையங்கள்
தமிழ்நாட்டில் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என்று 15 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

தேர்வு நாட்கள்
எம்.சி.ஏ நுழைவுத்தேர்வு 19-5-2018, காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.
எம்.பி.ஏ நுழைவுத்தேர்வு 19-5-2018, மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம். பிளான் நுழைவுத்தேர்வு 20-5-2018, காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும்.

நுழைவுத்தேர்வின் மதிப்பெண் தாள் (Mark Sheet) இணையதளத்தில் வெளியிடப்படும். அதிலிருந்து 10 நாட்களுக்குள் மதிப்பெண் தாளைத் தரவிறக்கம் செய்து, அச்சிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, மதிப்பெண் தாள் போன்றவை மாணவர் சேர்க்கையின்போது, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். தவறினால், ”The Secretary, TANCET, Anna University, Chennai – 600 025” பெயரில் ரூ.100/- க்கான வங்கி வரைவோலையைப் பெற்று, தங்களின் விண்ணப்ப எண் / பதிவு எண்ணை குறிப்பிட்டு கடிதம் அனுப்பி நகலைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டையும் தவற விட்டவர்கள் இரண்டுக்கும் தனித்தனியாக வங்கி வரைவோலை அனுப்பிப் பெறலாம்.

மாணவர் சேர்க்கை
நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம். பிளான் ஆகிய முதுநிலைத் தொழில் படிப்புகளுக்குச் சேர்க்கைக்கான நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்துச் சேர்க்கையைப் பெறமுடியும். கூடுதல் விவரங்களை இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது “The Secretary, Tamil Nadu Common Entrance Test (TANCET), Centre for Entrance Examinations, Anna University, Chennai – 600025” அஞ்சல் முகவரியிலோ அல்லது tancetenq@annauniv.edu மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 – 22358314 தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *