மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலன் பால், ஸ்ட்ராட்டோலான்ஞ் சிஸ்டம் கார்பரேசன் (Stratolaunch Systems Corp.) என்னும் பெயரில் விண்வெளி ஆய்வு சார்ந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலமாக, நடுத்தர ராக்கெட்டுகள் மற்றும் மறுமுறை பயன்படுத்தக் கூடிய விண்வெளிக்கான சரக்கு ஆகியவற்றைத் தயாரிக்க இருப்பதாக பால் ஆலன் தெரிவித்துள்ளார். இவருடைய அறிவிப்பு இலாபகரமான விண்வெளி ஏவுவாகனத் தயாரிப்புச் சந்தையில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கெட் விண்வெளியில் உள்ள சுற்று வட்டப் பாதையில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்துவதற்குத் தேவையான ராக்கெட்டுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்தின் ராக்கெட்டுகளுக்கு வரவேற்பு இருக்கும் என்றாலும், உள்நாட்டிலேயே அதிகமான போட்டியையும் சந்திக்க வேண்டிய நிலையும் உள்ளது. எலன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், போயிங் மற்றும் லாக்ஹீடு மார்டின் (Lockheed Martin) ஆகிய நிறுவனங்கள் இணைந்த யுனைடெட் அல்லையன்ஸ் நிறுவனம் ஆகிய தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஏற்கனவே நாசாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஸ்ட்ராட்டோலான்ஞ் நிறுவனம் ஸ்ட்ராட்டோலான்ஞ் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரத்தில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தயாரிக்கும் ராக்கெட்டுகளால் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவும் பணி எளிமையானதாக மாறிவிடும். 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்நிறுவனத்தின் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ராக்கெட்டுகளைக் கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய விமானம் இன்னும் சோதனைக் கட்டத்தில்தான் உள்ளது. 6 இஞ்சின்கள் ராக்கெட்டுகள் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதற்குப் பதிலாக, பூமியிலிருந்து வெகு உயரத்தில் பறக்கும் ஸ்ட்ராட்டோலான்ஞ் நிறுவனத்தின் 6 இஞ்சின்கள் கொண்ட மிகப்பெரிய விமானத்தின் அடிப்பாகத்திலிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் இறக்கப்படும். 2020 ஆண்டின் தொடக்கத்தில் ரிச்சர்ட் பிரான்சன் தொடங்கிய வெர்ஜின் கேலஸ்டிக் (Virgin Galactic) விண்கலத் தயாரிப்பு நிறுவனமும் ராக்கெட்டை ஏவுவதற்கு இந்த வகையான தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துகிறது.
ராக்கெட்டை சுமந்து செல்ல ஸ்ட்ராட்டோ நிறுவனம் தயாரிக்கும் விமானம், 550,000 பவுன்ட் (2,50,000 கிலோ) எடையைத் தாங்கிச் செல்லும் திறனுடையது. இது தரையிலிருந்து ஏவப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் எடைக்குச் சமமானதாகும். 2020 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 800 சிறிய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இரு மடங்காக இருக்கும் என விண்ணியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். நடுத்தர ராக்கெட் 2020 ஆம் ஆண்டில் நார்த்ராப் க்ரும்மான் கார்ப் நிறுவனத்தின் பிகாஸஸ் (Pegasus ) ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு ஸ்ட்ராடோலான்ஞ்ச் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. பிற ஏரோஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து தானே சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் முடிவுக்கு இந்நிறுவனம் வந்தது. 3,400 கிலோ (7,500 பவுண்ட்) எடையுள்ள புதிய நடுத்தர ராக்கெட்டை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விண்ணில் ஏவ ஸ்ட்ராடோலான்ஞ்ச் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளது. 6,000 கிலோ எடையுள்ள ராக்கெட் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த ராக்கெட் தயாரிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும் என்னும் விவரத்தைத் தெரிவிக்க இந்நிறுவனம் மறுத்துவிட்டது. விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விமானத்தைத் தயாரிப்பதிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.