நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: ‘உலகின் அனைத்து இடங்களிலும் தமிழகம் சார்ந்த அடையாளங்கள் ‘
”உலகின் எந்த இடத்திலும், தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், அங்கு, தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்,” என, ‘பாமா’ நிறுவன இயக்குனர், செரியன் பேசினார் என்கிறது தினமலர் நாளிதழ் செய்தி.

சென்னை, தமிழ் இணைய கல்விக் கழகத்தில், தொல்லியல் துறை சார்பிலான, மாதாந்திர கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதை, தமிழக தொல்லியல் துறை ஆணையர், உதயசந்திரன் துவங்கி வைத்தார்.
‘தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரமான முசிறி பட்டணம் ஒரு மீள் பார்வை’ என்ற தலைப்பில், கேரள தொல்லியல் துறை முனைவரும், ‘பாமா’ நிறுவன இயக்குனருமான, செரியன், “கேரள பட்டணம் என்ற இடத்தில் நடத்திய அகழாய்வில், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியுடன் இருந்த, கடல் கடந்த தொடர்புக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, முசிறி பட்டணமாக இருக்கலாம். இது, சீன, அரேபிய தொடர்புடைய மிகப்பெரிய வணிக மையமாக இருந்துள்ளது.முசிறி பட்டணத்தில், சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், ‘ரூலட்டட்’ என்ற துண்டுகள், ‘ஆம்போரா’ ஜாடி துண்டுகள், ரோமானிய சிவப்பு வகை ஓடுகள், உயர்வகை கற்களாலான மணிகள் இருந்தன. இது, ஒரு நகரத்துக்கான சான்றுகள்.முசிறி துறைமுகம் வீடுகளும், ரோமானிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளனர்.துறைமுக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் திறன், முசிறி பட்டணத்திற்கு இருந்துள்ளது. உலகின் எந்த இடத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்” என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *